சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 2-ந்தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும்.;
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு, சிவ வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நடராஜர் கோவிலின் சித்சபைக்கு எதிரேயுள்ள கொடி மரத்தில், திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் பக்தியுடன் இறைவனை வேண்டி கொண்டனர்.
இதில், முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 2-ந்தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும். கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.