தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.;

Update:2025-11-06 03:17 IST

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கும்ப பூஜையும் தொடர்ந்து சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சமைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலநது கொணடு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்