என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.;
கோப்புப்படம்
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டுகான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்கியது.
தற்போது பொதுபிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வருகிற டிசம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது.
மேலும், முதல் செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர்மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த மாண்டு (2026) ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்கும் என அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது