அரசியலில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர்செல்வம்

தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-09-15 11:42 IST

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தொண்டர்கள், மக்கள் மனநிலைகளை உணர்ந்து அதன்படி செயல்பட உறுதி ஏற்க வேண்டும். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி, சட்டவிதிகளை உருவாக்கித் தந்துள்ளார். இன்றைக்கு அந்த சட்ட விதி முறையாக பின்பற்றப்படவில்லை. அந்த விதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டுள்ளன. அது தொடர்பான, 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். நானும், செங்கோட்டையனும் தொலைப்பேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எதுவும் நடக்கலாம். அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை சொல்லித்தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்