ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீஸ் தரப்பில் ஆஜராக 2 மூத்த வக்கீல்கள் நியமனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக 2 மூத்த வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை தங்களுக்காக வக்கீலை நியமிக்காத 8 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தரப்பில் வாதாட மூத்த வக்கீல்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆகியோர் சிறப்பு அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின்பு, இந்த வழக்கை பிப்ரவரி 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.