அழகு செடி என நினைத்து வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபர்... கைது செய்த போலீசார்

கன்னியாகுமரியில் அழகு செடி என நினைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-10-21 05:53 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடி என நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கஞ்சா செடி போல் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கஞ்சா செடியை வேருடன் பிடுங்கி அகற்றினர். மேலும் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்