உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டிய உதவி பேராசிரியர் கைது

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டிய உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-06-02 08:53 IST

கடலூர்,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய மாணவி ஒருவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் முதுநிலை வேளாண் படிப்பு படித்து வந்தார்.

அப்போது அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த சிதம்பரம் விபீஷ்ணபுரம் சாரதாராம் நகரை சேர்ந்த ராஜா (வயது 55 )என்பவர், அந்த மாணவியுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டதோடு, அதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. தற்போது அந்த வீடியோவை வைத்து அந்த மாணவியை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்