சென்னையில் வீடு புகுந்து திருட முயற்சி; 52 வயது பெண் கைது

சுகுமாரின் உறவினர் ஒருவர் ஓடி வந்து மல்லிகாவை மடக்கிப் பிடித்தார்.;

Update:2025-08-29 20:19 IST

சென்னை,

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 62 வயதான சுகுமார் என்பவரது வீட்டிற்கு நேற்று மல்லிகா(வயது 52) என்ற பெண் வந்துள்ளார். தனக்கு எதாவது வேலை கொடுக்குமாறு சுகுமாரிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது சுகுமார், வேலை எதுவும் இல்லை என்று கூறி அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது அந்த பெண் சுகுமாரின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி, வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சுகுமார் பயத்தில் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அருகில் இருந்த சுகுமாரின் உறவினர் ஒருவர் ஓடி வந்து மல்லிகாவை மடக்கிப் பிடித்தார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஜே.ஜே.நகர் காவல்நிலைய போலீசார் மல்லிகா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்