பொதுமக்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயருகிறது
ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.
புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இதனிடையே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.