பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் கே.என்.நேரு

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.;

Update:2025-11-16 08:53 IST

கோவை,

கோவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செம்மொழி பூங்காவை திறக்க இந்த மாதம் 26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும். விளையாட்டு பகுதி, வாட்டர் கார்டன் உள்பட 4 பணிகள் இன்னும் முடியவில்லை. ரூ.167.25 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.47 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

Advertising
Advertising

பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என பா.ஜனதாவினர் பேசுவார்கள். ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு பி.எல்.ஓ. நியமிக்கப்பட்டு 68 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 90 சதவீதம் விண்ணப்பங்கள் கொடுத்து உள்ளோம். வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை.

வாக்காளர்களை சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து உள்ளது. கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் நல்ல நீரை தேக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவை, மதுரையில் விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்