சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்

சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.;

Update:2025-11-16 06:28 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதி, வீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), 23-ந்தேதியும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்