பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது; இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;

Update:2025-04-14 15:06 IST

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது,

தேர்தலில் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி. இந்த கூட்டணிதான் விடியலையும், வெளிச்சத்தையும் தரப்போகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. பா.ஜ.க. நயவஞ்சகமான கட்சி. நயவஞ்சகமான உறவை வைத்து அந்த உறவை பயன்படுத்தி எந்த கட்சியோடு உறவு வைத்துள்ளதோ அந்த கட்சியை அழிப்பதுதான் பா.ஜ.க.வின் வேலை. அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து நிர்பந்தபடுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இது இயல்பான கூட்டணி இல்லை.

அமலாக்கத்துறையின் சோதனை மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்' என்றார்.    

Tags:    

மேலும் செய்திகள்