ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐகோர்ட்டில் இருந்து பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.;

Update:2025-09-26 11:04 IST

மதுரை மேலூர் மெயின் ரோடு அருகே ஒத்தக்கடை பகுதியில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமைந்துள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய கோர்ட்டாக இது உள்ளது.

இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளளது. ஐகோர்ட்டு பதிவாளருக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஐகோர்ட்டில் இருந்து பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு மதுரை கிளை முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, சென்னை ஐகோர்ட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்