17-ம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

பூத் வலிமைப்படுத்தும் பயணத்தில் ஒரு பகுதியாக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-08 00:30 IST

சென்னை,

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 17ல், 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பா.ஜ.க., பூத் கமிட்டி பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பூத் வலிமைப்படுத்தும் பயணத்தில் ஒரு பகுதியாக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் 17 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, நிர்வாகிகளை, திருநெல்வேலியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

அப்போது, பிற சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வருகைதரும், பூத் முகவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டிய வசதிகள் மற்றும் மாநாட்டு பணிகளை எப்படி கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.

அப்போது, மாநில பொதுச்செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலகணபதி, திருநெல்வேலி வடக்கு மாவட்ட‌‌ பாஜக தலைவர் முத்து பலவேசம், திருநெல்வேலி மாவட்ட பாராளுமன்ற பொறுப்பாளர் நீலமுரளி மற்றும் பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்