கார் - ஆட்டோ மோதி விபத்து - 4 பெண்கள் பரிதாப பலி

வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விட்டு அங்கிருந்து சென்றது.;

Update:2025-06-05 13:24 IST

கோப்புப்படம்

அமராவதி,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் அடுத்த வெங்கட்ராவ் பள்ளியை சேர்ந்த 8 பெண் தொழிலாளர்கள் தெல்ல பாடுவில் உள்ள புகையிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஆட்டோவில் வேலைக்கு சென்றனர்.

ஆத்மகூர் அடுத்த ஏ.எஸ்.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விட்டு அங்கிருந்து சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்