சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-30 16:11 IST

சென்னை, 

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ சோதனையால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டிலும் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்த விரிவான விவரங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்