செங்கல்பட்டு: கிராம உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.;

Update:2025-11-09 15:57 IST

செங்கல்பட்டு,

தமிழ்நாடு அரசின் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுச் செய்யப்படவில்லை. இதனால், பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அதனையடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,299 கிராம உதவியாளர் (TN Village Assistant Job vacancies) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த அந்த மாவட்டங்களுக்கு அதிகாரிகள் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பணியிடங்களுக்கு நடைபெற இருந்த கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காலை முதல் முறையான அறிவிப்பின்றி அலைகழிப்பதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்