சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு

இன்று காலை முதல் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள், க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.;

Update:2025-09-20 10:01 IST

சென்னை:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, பயணிகள் சி.எம்.ஆர்.எல். மொபைல் செயலி, வாட்ஸ்அப், போன்-பே மூலம் டிக்கெட்களை பெறலாம். மேலும் மெட்ரோ ரெயில் பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று காலை முதல் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்