சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரெயில் சேவை தாமதம்

சென்னை மெட்ரோ ரெயில் பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-25 08:04 IST

கோப்புப்படம்

சென்னை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கோயம்பேடு -அசோக் நகர் இடையே (பச்சை வழித்தடம்) மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாக தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்டிரல் இடையே நேரடி ரெயில் சேவை நிலையங்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

இருப்பினும், சென்னை சென்டிரல் மற்றும் கோயம்பேடு இடையேயும், அசோக் நகர் மற்றும் செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்தும் வழக்கமான சேவைகள் வழங்கபட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன. எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்