டிட்வா புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது: - அமைச்சர் பேட்டி
சென்னையில் நாளை அடைமழை பெய்யும் என்பதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறினார்.;
சென்னை,
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். புயலின் தாக்கம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; - சென்னையில் நாளை அடைமழை பெய்யும் என்பதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம்.
டிட்வா புயல் சென்னையை ஒட்டி வரும். இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 1058 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை டிட்வா புயல் காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை.13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 1058 பேர் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.5 கிலோ அரிசிப் பைகள் சுமார் 5 லட்சம் எண்ணிக்கையில் தயாராக வைத்துள்ளோம்" என்றார்.