அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்

இன்று தனது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.;

Update:2025-03-01 10:03 IST

இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிலையில் மாணவர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி உள்ளன.  


Tags:    

மேலும் செய்திகள்