தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்
நாளையும், நாளை மறுதினமும் மேற்கொள்ளவிருந்த பயணம் மழையால் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது.;
சென்னை,
அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் செல்ல உள்ளார்.
29ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அன்றிரவு அங்கேயே தங்கும் முதல்-அமைச்சர், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து மதுரையில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் ஆலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.