மாநகர பஸ் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை 24-ந்தேதி வரை நீட்டிப்பு

மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரையில் விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2025-04-21 21:49 IST

சென்னை,

சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7-ந்தேதி முதல் 22-ந் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் அனைத்து மாநகர் போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10-ந்தேதி அன்று மகாவீர் ஜெயந்தி, 14-ந்தேதி அன்று தமிழ் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி இந்த முறை மாதாந்திர பயண அட்டை, சலுகை அட்டை விற்பனை வருகிற 24-ந்தேதி அன்று வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி பயன் அடையலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்