நெல்லை பல்கலைக்கழகத்தில் மோதல் சம்பவம்; 14 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வர தடை

மாணவர்கள் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.;

Update:2025-09-03 21:32 IST

பேட்டை,

நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, விசாரணை முடியும் வரை 14 மாணவர்கள் வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 29ம் தேதி, வரலாற்றுத்துறை மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டடனர்.

மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கின. மாணவர்கள் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் விசாரணை முடியும் வரை மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 14 மாணவர்கள் வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. விசராணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என பல்கலைக்கழக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்