உலக மீனவர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக மீனவர் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.;
உலக மீனவர் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக மீனவர் தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள்! மீனவர் நல மாநாடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவிகள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், தூண்டில் வளைவுகள் என உங்கள் கோரிக்கைகள் அத்தனையையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக என்றும் நமது திராவிட மாடல் அரசு தொடரும்!
என தெரிவிக்கப்பட்டுள்ளது.