கோவை: மாங்காய் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

கிணத்துக்கடவு அருகே மாங்காய் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update:2025-06-19 02:30 IST

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலைமடை பகுதியை சேர்ந்த பைரோஸ் (வயது 39) என்பவர் ஓட்டி சென்றார். கிணத்துக்கடவு பகுதியில் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை சரக்கு வாகனம் இழந்தது. தொடர்ந்து சாலையோர தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த மாங்காய்கள் அனைத்தும் சாலையிலும், சாலையோரத்திலும் சிதறி ஓடின.

அத்துடன் சரக்கு வாகனத்தில் இருந்த டிரைவர் பைரோசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தை கண்டதும் அந்த வழியாக வந்தவர்கள் ஓடி வந்து பைரோசை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனம் மீட்கப்பட்டது.

பின்னர் மற்றொரு சரக்கு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் மாங்காய்கள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாங்காய்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்