கோவை: சிறுமுகை அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியே வந்தன.;

Update:2025-09-14 03:30 IST

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரத்தை அடுத்த காந்தவயல் வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை, அடர்ந்த வனப் பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி அடிக்கடி வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியே வந்தன. அவை, வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன. அந்த காட்டு யானைகள் நேற்று காலை லிங்காபுரம் சாலையை கடந்து தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்குள் சென்றன. லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனச்சாலையை கடந்து செல்வதை அடிக்கடி காண முடிகிறது. எனவே வனச்சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்