அஜித்குமார் கொலை குறித்து வலைத்தளத்தில் கருத்து: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

போலீஸ்துறை குறித்து அவதூறான, தவறான தகவல்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.;

Update:2025-09-14 23:46 IST

திருப்பூர்,

திருப்பூர் மாநகர போலீசில், சைபர் கிரைம் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகன் (வயது 58). இவர், போலீஸ்துறை குறித்து அவதூறான, தவறான தகவல்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.

குறிப்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், சமீபத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவல்களை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸ்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி மாநகர போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 10 பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, போலீஸ் துணை கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகனை பணியிடை நீக்கம் செய்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உரிய அனுமதியின்றி அவர், தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்