விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள்: விக்கிரவாண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்
உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது.;
விக்கிரவாண்டி,
காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால், இன்று காலையில் இருந்தே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இதனால், உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.