கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதி
தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்சால் கூமாபட்டி படுபயங்கர டிரென்ட் ஆனது;
சென்னை,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் கூமாபட்டி. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமமான கூமாப்பட்டி என்ற கிராமம், தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்சால் படுபயங்கர டிரென்ட் ஆனது. \"ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு" என அவர் பேசி ரீல்ஸ் வெளியிட்டார். இந்த ரீல்சை கண்டு கூமாப்பட்டிக்கு வெளியூர் நபர்களும் படையெடுத்தனர்.
இதில் பிரபலமான இவர் தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் இவருக்கு விளம்பர வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இவ்வாறு வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருக்கும் கூமாபட்டி தங்கபாண்டி, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பேருந்தில் கூமாபட்டிக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தை ஓட்டிய டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் கதவில் மோதி தங்கப்பாண்டிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.தங்கப்பாண்டிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
----