கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்; 4 குழந்தைகள் பரிதவிப்பு
வேடசந்தூர், வடமதுரை போலீஸ் நிலையங்களில் அடிக்கடி காதல் ஜோடிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது வழக்கம்.;
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 22). இவர் தனது தாய் மாமனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழாவுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (24) என்பவர் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
திருவிழாவில் சந்தித்துக் கொண்ட இவர்கள் பழக்கம் நட்பாக வளர்ந்தது. நாளும், மாதமும் கடந்த சென்றபோது இருவரின் நட்பும் ஆழமானது, செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இது குறித்து வைஷ்ணவியின் வீட்டுக்கு தெரிய வரவே அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இருந்தபோதும் கேட்காமல் அவர்கள் தங்கள் கள்ளத்தொடர்பை வளர்த்து வந்தனர். இதே போல் சூர்யா வீட்டிலும் இந்த விவகாரம் தெரிய வரவே அங்கு தகராறு வெடித்தது. இதனால் கள்ளக்காதல் ஜோடிகள் 2 பேரும் தங்கள் குடும்பத்த னரையும், குழந்தைகளையும் மறந்து வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இது குறித்து இருவரது குடும்பத்தினர் சார்பில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க்ப பட்டது. வேடசந்தூர் டி.எஸ். பி. பவித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதனிடையே தனது மனைவி போலீஸ் நிலையத்துக்கு வந்ததை அறிந்து வைஷ்ணவியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்தனர். இதே போல் சூர்யாவின் குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் சூர்யா மற்றும் இது வைஷ்ணவியிடம் இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்றும் குழந்தைகளுக்காக குடும்பத்துடன் சேர்ந்து வாழுமாறு தெரிவித்தனர். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் வைஷ்ணவி தனக்கு கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், சூர்யாவுடன் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். இதனையடுத்து அவர்களை அங்கிருந்து சப்-இன்ஸ்பெ க்டர் அனுப்பி வைத்தார்.
வேடசந்தூர், வடமதுரை போலீஸ் நிலையங்களில் அடிக்கடி காதல் ஜோடிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது வழக்கம். பின்னர் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்படு வார்கள். அது போல கள்ளக்காதல் ஜோடிகளை போலீசாரே குடும்பத்துடன் சேர்த்து வைக்காமல் அனுப்பி வைத்தது இரு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செயலால் அவர்களது 4 குழந்தைகளும் தற்போது பரிதவித்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. இது போன்ற குடும்ப நல பிரச்சினைகளில் எவ்வாறு முடிவெடுப்பது என்பது குறித்து போலீசாருக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.