தமிழக பா.ஜனதா தலைவர் ' நயினார் நாகேந்திரன் 'திடீர்' டெல்லி பயணம்

செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேர எடுத்துள்ள முடிவும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-11-25 20:29 IST

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டவாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று தேனியில் சுற்றுப் பயணம் செய்தார். இந்த நிலையில் அவரை உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அழைத்துள்ளது. இதையடுத்து மதுரையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.டெல்லியில் கட்சியின் தேர்தல் அதிகாரி பாண்டா மற்றும் மேலிட தலைவர்களை சந்திக்கிறார். மத்திய மந்திரி அமித்ஷா விரைவில் தமிழகம் வரவிருக்கிறார். அதற்குள் கூட்டணி விவகாரங்களை பேசி முடிவு செய்ய திட்ட மிட்டு உள்ளார்கள். இது தொடர்பாக ஆலோசிப்ப தற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை இணைப்பதில் உள்ள பிரச்சினைகள், பா.ஜனதாவுக்கான தொகுதி பங்கீடுகள் உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் பற்றி மேலிட தலைவர்கள் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேர எடுத்துள்ள முடிவும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மற்ற கட்சிகள், கூட்ட தலைவர்களை ணிக்குள் கொண்டு வர டெல்லி தலைமை விரும்புகிறது.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் இந்த மாத இறுதிக்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க டெல்லி தலை வர்கள் முடிவு செய்துள்ள தாகவும் இந்தவிவாதங்களில் தொடரும் சிக்கல்களை களைவதற்கான முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்