மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.;

Update:2025-11-25 21:29 IST

தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் தலவாணி முத்து மகன் மாடசாமி (வயது 70) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சின்னம்மா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாடசாமிக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. நேற்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறினாராம். இதனால் மன வேதனையில் மாடசாமி அங்குள்ள கொடுக்காப்புளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்