ஓடும் பஸ்சில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை, பணம் திருட்டு
3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனதால் அதிர்ச்சியடைந்தார்.;
கோப்புப்படம்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ஆனந்தவல்லி (வயது 45). இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்புவனத்தில் இருந்து மானாமதுரையில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார்.
பின்னர் பர்சை ஆனந்தவல்லி பார்த்தபோது திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.