மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு சாவு
தாழ்வாக உள்ள மின்கம்பிகளை அதிகாரிகள் பார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள கீழப்புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது70). விவசாயி. இவர் நேற்று மாலை மதன் பட்டவூர் பகுதியில் உள்ள சென்னா குளக்கரையில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. அதிஷ்டவசமாக பெரியசாமி உயிர் தப்பினார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு வந்து உடற்கூறு ஆய்வு செய்தார். இந்த பகுதியில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை அதிகாரிகள் பார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.