விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் திடீர் ஆய்வு

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.;

Update:2025-10-09 09:25 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரிகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.

நொய்டாவில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் இருந்து வந்த டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், பெங்களூரு சி.ஆர்.பி.எப். கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'ஒய்' பிரிவு பாதுகாப்பு ஏற்பாடுகளின் தரம் மற்றும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் ஆய்வுக்கு பிறகு, உயர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்