அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை

அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-01-29 14:42 IST

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்களா? என்பது குறித்து பல்லடம் டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்