தர்மபுரி: நாயை கவ்விச் சென்ற சிறுத்தை...அதிர்ச்சி வீடியோ
சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது வரை 10-க்கும் மேற்பட்ட கோழி சேவல் நாய்களையும் சிறுத்தை வேட்டையாடியதாக தெரியவந்துள்ளவது. சிறுத்தையை பிடிக்கும் வரை கால்நடைகளை மேச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்கச்செய்கிறது.
சிறுத்தையை பொறிவைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.