தருமபுரி: 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி சம்பவம்

பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2025-08-23 16:18 IST

தருமபுரி மாவட்டம் ஏரியூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முதல்வராக வினுலோகேஸ்வரன் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இதனிடையே, பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வினுலோகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்