'2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-02 22:41 IST

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சிதறக்கூடிய சூழ்நிலைதான் அரசியல் களத்தில் இன்றைய நிலவரமாக இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும்.

எங்களைப் பொறுத்தவரை தி.மு.க. பிரதான எதிரி. அதே போல் பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி இல்லை."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்