முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.