’கூட்டணியை கையாளத் தெரியவில்லையா? - டிடிவி குற்றச்சாட்டுக்கு நயினார் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்றே விரும்பினோம் என நயினார் நாகேந்திரன் கூறினார்.;

Update:2025-09-06 13:19 IST

கோவை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்றே விரும்பினோம். ஓபிஎஸ், டிடிவி இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு குற்றம் சாட்டுகிறார்களா என தெரியவைல்லை. துக்கடா கட்சி என அம்முகவை நினைக்கவில்லை. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எங்கேயும் நான் ஆணவமாக நடக்கவில்லை.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள்து விருப்பமாக உள்ளது. எல்லோரும் இணைந்தால்தால் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக விவகாரம் குறித்த செங்கோட்டையனின் பேட்டி அவர்களது உட்கட்சி விவகாரம். அமித்ஷாவை தேவையின்றி வம்பிற்கு இழுத்துள்ளார் டிடிவி தினகரன். இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது."

இவ்வாறு  அவர் கூறினார். 

 

Tags:    

மேலும் செய்திகள்