போதைப்பொருள் கடத்தல் -11 மாதங்களில் 1411 வழக்குகள் பதிவு

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-07-12 21:27 IST

சென்னை,

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 2,534 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 129 கொக்கைன், மெத், அம்பட்டமின் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை மொத்தம் 67 கிலோ பறிமுதல் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்