சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2025-11-15 16:21 IST

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பயணி ஒருவரின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.06 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போதைப்பொருளை கடந்த வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்