ஈஸ்டர் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;

Update:2025-04-20 08:34 IST

கோப்புப்படம் 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு 3-வது நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதன் நினைவாக இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் திருச்சியில் உள்ள உலக மீட்பர் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்