நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் குறைவு

கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்துள்ளது.;

Update:2026-01-09 06:57 IST

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவற்றால் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளை, கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக கோழிப்பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்