கரூர்: வெறிநாய் கடித்து மூதாட்டியின் கை விரல் துண்டானது - அதிர்ச்சி சம்பவம்
வெறிநாய் மூதாட்டியின் கை விரலை கடித்தது.;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி சவுராபானு. இவர் இன்று தெருவில் நடந்து சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் மூதாட்டியின் கை விரலை கடித்தது. இதில் மூதாட்டியின் கைவிரல் துண்டானது.
இதையடுத்து, மூதாட்டியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், குளித்தலை பாரதி நகரில் வெறிநாய் துரத்திச்சென்று கடித்ததில் மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.