பூந்தமல்லி: தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் - பரபரப்பு சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 2க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் பதறியடித்து உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
இந்த கார் தீ விபத்து குறித்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.