சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் ஒருவர் வேலைக்கு சென்ற வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.;
தூத்துக்குடி தாளமுத்துநகர் சவேரியார்புரத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஆறுமுகம் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ஒரு வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபாஜென்சி விசாரணை நடத்தி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.