அன்பானவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்: போலீஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்

டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும் என்று இஷா சிங் பதிவிட்டுள்ளார்.;

Update:2026-01-07 06:44 IST

புதுவை,

கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங் சிறப்பாக பணியாற்றி கூட்டத்தை ஒழுங்குப்படித்தினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான காவல் அதிகாரியாகவும் இஷா சிங், புதுவை தவெக கூட்டத்திற்கு பிறகு மாறினார். கடந்த 31-ந் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இஷா சிங்கை பார்த்ததும், அவரிடம் சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இஷா சிங் பணியிட மாறுதல் பெற்றுள்ள நிலையில் புதுவை மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பதிவிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்